1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Madame Tussauds make wax statue for Virat Kohli

விராட் கோலிக்கு லண்டனில் மெழுகு சிலை! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Cricket
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு லண்டன் மடாமெ துசாட் மியூசியத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டியில் கேப்டனாக களம் இறங்கும் விராட் கோலி, இதுவே கேப்டனாக தனது கடைசி உலகக்கோப்பை டி20 என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலண்டனில் உள்ள பிரபலமான மடாமெ துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் மைக்கெல் ஜாக்சன், ஜாக்கிசான், ஷாரூக்கான், டெண்டுல்கர் உள்ளிட்ட பலருக்கு மெழுகு சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சென்னை அணி இந்த 3 வீரர்களைதான் தக்கவைக்கும்… ஷான் போலக் கருத்து!