திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 18 அக்டோபர் 2021 (19:31 IST)

தன் குட்டி தேவதையுடன் கொஞ்சி விளையாடும் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.  மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். 
 
குழந்தை பிறந்து 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தங்கள் மகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டவேயில்லை. மீடியாக்களின் கண்களில் இருந்து தங்களது குழந்தையை இருவரும் மறைத்தே வைத்துள்ளனர். 
 
அவ்வப்போது முகம் காட்டாமல் சில கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுஷ்கா விராட் கோலி தம்பதி தற்போது மகளுடன் கோலி சிரித்து விளையாடும் ஒரு அழகிய புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு " என்னுடைய மொத்த உலகமும் இந்த ஒத்த பிரேமில் உள்ளது" என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.