வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (09:26 IST)

ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… யார் கெத்து?

நாளை ஆசியக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் எதிர்பார்க்கபடுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் நாளை மறுநாள் நடக்க உள்ள போட்டிதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள போட்டி. இந்த முறை இவ்விரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. 14 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8-ல் இந்தியாவும் 5 ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டுள்ளது.

கடைசியாக 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.