வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (15:57 IST)

ஜெய்ஸ்வாலை அடுத்து சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல்.. 400ஐ நெருங்கும் இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில் இதில் தற்போது இந்திய அணி முதலாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.  
 
இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 80 ரன்கள் அடித்து அவுட் ஆன நிலையில் சதத்தை அவர் தவறவிட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கே எல் ராகுல் 86 ரன்களில் அவுட் ஆகி அவரும் சதத்தை தவற விட்டு உள்ளார்.
 
இருப்பினும் ஜடேஜா தற்போது அதிரடியாக விளையாடி 63 ரன்களில் உள்ளார் என்பதும் அநேகமாக அவர் சதம் அடித்தார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 127 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது என்பதும் இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran