1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இன்று இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டி: விராத் கோஹ்லி திடீர் விலகல்!

Virat Kohli
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது
 
சமீபத்தில் முடிந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது என்பது தெரிந்ததே
 
 இந்தநிலையில் இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பது மணிக்கு பகலிரவு போட்டியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய ஒருநாள் தொடரில் விராத் கோலி பங்கேற்க மாட்டார் என்றும் காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இருப்பினும் இந்திய அணி வலுவாக இருப்பதாகவும் டி20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் வெல்லும் என்றும் கூறப்பட்டு வருகிறது.