திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (07:40 IST)

3வது டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி!

ind vs eng
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 117 ரன்கள் எடுத்தும் இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகி சொதப்பியதால் இந்திய அணி தோல்வியடைய நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. ஆட்டநாயகனாக ரீஸ் டாப்லே என்பவரும் தொடர் நாயகனாக புவனேஷ்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது