கடைசி நேரத்தில் தடுமாறிய இந்தியா: 488 ரன்களுக்கு ஆல் அவுட்
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 488 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் ஜோ ரூட் 124 ரன்கள், மொயின் அலி 117 ரன்கள் ஜோ ரூட் 124 ரன்கள் பென் ஸ்டோக்ஸ் 124 ரன்கள் குவித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 488 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக, புஜாரா 124 [17 பவுண்டரிகள்] ரன்களும், முரளி விஜய் 126 [9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்] ரன்களும் எடுத்தனர்.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்திருந்த இந்திய அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் பெரிய அளவிலான ரன்களை குவிக்கத் தவறியது.
4ஆவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே ரஹானே 13 ரன்களிலும், விராட் கோலி 40 ரன்களிலும், விருத்திமான் 35 ரன்களிலும், ஜடேஜா 12 ரன்களிலும், உமேஷ் யாதவ் 8 ரன்களிலும் வெளியேறினர்.
தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிவடைந்தபோதும் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அஸ்வின் 70 ரன்கள் குவித்து அணி ஓரளவு சிறப்பான நிலையை எட்ட உதவினார். பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்திய அணி 49 ரன்கள் பின்தங்கியுள்ளது.