1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:38 IST)

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: 2 இந்திய வீரர்கள் விலகல்!

rohit
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரோகித் சர்மா காயத்திலிருந்து இன்னும் முழுவதுமாக குணமாகி முழு உடல் தகுதியை அடையவில்லை. எனவே அவர் முழு உடல்தகுதியை அடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதால் அவர் போட்டியிலிருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளது
 
அதேபோல் காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சைனி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. எனவே ரோகித் சர்மா மற்றும் சைனி ஆகியோர்களுக்கு பதிலாக இந்திய அணியில் இணைவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ஏற்றுக்கொள்கிறேன்
 
Edited by Mahendran