வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (15:14 IST)

35 ரன்களில் இந்தியா வெற்றி -ராயுடு, பாண்ட்யா, சஹால் மிரட்டல் !

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் 3-1 என்ற நிலையில் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இன்று 5 ஆவது ஒருநாள் போட்டித் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்கார்ர்களான ரோஹித் ஷர்மா மற்றும் தவான் இரண்டு பேரும் 2 மற்றும் 6 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதையடுத்து சுப்மன் கில் 7 ரன்களிலும் தோனி 1 ரன்னிலும் வெளியேறினர்.

அதனையடுத்து அம்பாத்தி ராயுடுவின் (90) மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி 45 ரன்களால் இந்தியா 252 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. இந்தியா 49.5 ஓவர்களில் 252 ரன்களில் ஆட்டமிழந்தது.நியுசிலாந்து தரப்பில் ஹென்றி  4 விக்கெட்களும் போல்ட் 3விக்கெட்டுகளும் ஜிம்மி நீஷம் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 252 ரன்கள் என்ற எளிய இலக்கோடுக் களமிறங்கிய நியுசிலாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன்(39), டாம் லாதம் (37), ஜேம்ஸ் நீஷம் (44) ஆகியோர் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று விளையாடினர். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக ஆடுகளத்திற்கும் பெவிலியனுக்கும் அணிவகுப்பு நடத்தினர். இதனால் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவின் ஷமி மற்றும் சஹால் தலா 2 விக்கெட்களும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர் இந்தியாவின் சஹால் 3 விக்கெட்களும் ஷமி மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்களும் மற்றும் கேதார் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மிகக் கம்மியான இந்த ஸ்கோரை அடிக்க விடாமல் நியுசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா இத்தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.