செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (09:57 IST)

5 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா தடுமாற்றம் – தனியாளாக போராடும் ராயுடு !

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் 3-1 என்ற நிலையில் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இன்று 5 ஆவது ஒருநாள் போட்டித் தொடங்கி நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்கார்ர்களான ரோஹித் ஷர்மா மற்றும் தவான் இரண்டு பேரும் 2 மற்றும் 6 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதையடுத்து சுப்மன் கில் 7 ரன்களிலும் தோனி 1 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதையடுத்து அம்பாத்தி ராயுடு மற்றும் விஜய் ஷங்கர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி அணியை சர்வில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய விஜய் ஷங்கர் 45 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக மற்றொரு வீரரான அம்பாத்தி ராயுடு அரைசதம் அடித்துத் தொடர்ந்து களத்தில் விளையாடி வருகிறார்.

சற்று முன்பு வரை இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்துள்ளது. அம்பாத்தி ராயுடு 52 ரன்களோடும் கேதார் ஜாதவ் 4 ரன்களோடும் களத்தில் உள்ளனர். நியுசிலாந்து தரப்பில் போல்ட் மற்றும் ஹென்றி தலா 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.