திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (14:23 IST)

வெற்றிமாறன் - சூரி படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்

சமீபத்தில் அசுரன் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். சூரி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவதை கோலிவுட் திரையுலகில் உள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் அதற்குள் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக பிப்ரவரி 25 முதல் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இடையில் ’தலைவர் 168’ படத்திற்காக கொடுத்த கால்சீட்டை திரும்பப் பெற்று வெற்றிமாறன் படத்திற்கு சூரி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது 
 
சூரியின் இந்த நடவடிக்கையை பெருந்தன்மையோடு சிறுத்தை சிவா ஏற்றுக்கொண்டதாகவும் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் ஒத்திவைக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சூரி தனிப்பட்ட முறையில் சிறுத்தை சிவாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது