திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:26 IST)

செக்ஸ் டார்ச்சரில் ஈடுபட்ட இந்திய மருத்துவருக்கு 10 மாதம் சிறை

அமெரிக்காவில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக இந்திய மருத்துவருக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பலர் பாலியல் தொடர்பான வழக்குகளில் அவ்வப்போது சிக்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான அருண் அகர்வால் (வயது 40) அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் டேட்டன் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 2 பெண் நோயாளிகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டுள்ளார். 
 
பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அருண் அகர்வால்  கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணையின் போது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அருண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என முடிவு செய்த நீதிமன்றம், அவருக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.