கே.எல்.ராகுல் அரைசதம்.. வாய்ப்பை பயன்படுத்தாத சாய் சுதர்சன்..இந்தியாவின் ஸ்கோர் என்ன?
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இளம் வீரர் சாய் சுதர்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். அவர் வெறும் 7 ரன்களில் அவுட் ஆனார்.
எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் அபாரமாக விளையாடி, அரை சதம் அடித்து, உறுதியாக களத்தில் உள்ளார். அவர் இதுவரை 6 பவுண்டரிகளை அடித்துள்ளார். இவருக்கு துணையாகச் தற்போது சுப்மன் கில் விளையாடி வருகிறார். அவர் 13 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி 33 ஓவர்கள் முடிவில், இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி இன்னும் 49 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Edited by Siva
