செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 அக்டோபர் 2025 (14:01 IST)

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்.. பிரதமர் வெளியீடு..!

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்.. பிரதமர் வெளியீடு..!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.  இந்த நாணயத்தில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக 'பாரத மாதா'வின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
 
ரூ. 100 மதிப்புள்ள இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மற்றொரு பக்கத்தில் கம்பீரமான தோற்றத்தில் பாரத மாதாவின் உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும் நாணயத்தில் RSS தொண்டர்கள் அவருக்கு முன் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் வணங்குவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வெளியீட்டு நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, பாரத மாதாவின் உருவம் இந்திய நாணயத்தில் இடம்பெற்றுள்ளது. இது மிகுந்த பெருமைக்கும் வரலாற்று முக்கியத்துவத்திற்கும் உரிய தருணம்" என்று தெரிவித்தார்.
 
நாணயத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையானது, 1963 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 
 
டெல்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
Edited by Siva