புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (22:11 IST)

183 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து: பும்ரா, ஷமி அபாரம்

183 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து: பும்ரா, ஷமி அபாரம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி ரன் எடுக்க திணறி வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது இதனை அடுத்து இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது
 
அதன்பின் கேப்டன ரூட் மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் ஓரளவு நிலைத்து ஆடினாலும் அந்த அணியின் 3 வீரர்கள் எடுக்காமலும் 3 வீரர்கள் ஒற்றை இலக்கங்களிலும் அவுட் ஆகி ரன்கள் எடுக்க திணறினர்.
 
இந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா 4 விக்கெட்டுக்களையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர்