1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 செப்டம்பர் 2018 (14:55 IST)

இங்கிலாந்து இப்படியே ஆடினால்....... அவ்வளவுதான் இந்தியா

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் குவித்தது. இந்திய அணி 292 ரன்கள் குவித்தது. அதுவும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய தப்பியது.
 
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 154 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் மற்றும் தொடக்க வீரரான குக் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 4வது நாளான இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணி தோல்வி அடையும் அல்லது இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.