வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (09:20 IST)

எந்த சூழ்நிலையிலும் இறங்கி அடிக்க இந்தியா ரெடி! – ரவி சாஸ்திரி நம்பிக்கை

நியூஸிலாந்துடனான தொடர் கிரிக்கெட் போட்டிகளுக்காக சென்றுள்ள இந்திய அணி எந்த சூழலையும் எதிர்கொள்ளும் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை இந்திய மண்ணில் வீழ்த்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி அடுத்ததாக நியூஸிலாந்து அணியுடன் ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் மோத இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் இந்தியாவை நியூஸிலாந்து வீழ்த்தியது. அதற்கு பிறகு மீண்டும் இந்தியா – நியூஸிலாந்து சந்திக்கும் போட்டி இது என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்கு இந்தியாவிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நியூஸிலாந்து தொடர் குறித்து பேசியுள்ள இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ”ஆஸ்திராலியாவுடனான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்த ஆட்டங்களில் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். நியூஸிலாந்து ஆடுகளம் இந்தியாவிற்கு சற்று சவாலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும் அதன் சூழலை புரிந்து கொண்டு இந்திய அணி சிறப்பாக விளையாடும். அணியில் ஷிகர் தவான் இல்லாதது கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.