1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (17:57 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா- பாகிஸ்தான் மோதும் தேதி இதுதான்!

India Pakistan
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை சற்று முன் வெளியான நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகஸ்ட் 28ஆம் தேதி மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளன 
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.  
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்றும் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
asiacup