செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (17:11 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… மீண்டும் இரண்டாம் இடத்தில் இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இமாலய வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசைப் பட்டியலில் மீண்டும் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. இந்த தொடரை 2-1 மற்றும் 3-1 என்று வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிடும் என சொல்லப்படுகிறது.