1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (18:34 IST)

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை விட இந்தியா சிறந்த அணி : ஹர்பஜன் சிங்

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா தற்போது அசைக்க முடியாத பார்மில் இருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் (2-1) தொடரை வென்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 ஆ ட்டத்தில் மூன்றில் வென்று தொடரைக் கைப்பற்றியது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி தொடரை வென்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அதில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை அணியை விட சிறந்த அணி. எனினும் இந்திய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணிக்கு நிகராக உலகில் எந்த அணியும் இல்லை இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.