1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona daily cases register 2 thousand

இந்தியாவில் 18,738 பேர் பாதிப்பு; 40 பேர் பலி! – கொரோனா பாதிப்பு நிலவரம்!

India Corona Crisis
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 18,738 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,41,45,732 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,26,689 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,34,84,110 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,34,933 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம்