1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:49 IST)

முதல் இன்னிங்ஸில் 350 ரன்களை நூலிழையில் மிஸ் செய்த இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் மற்றும் கில், ஜடேஜா ஆகியோர்களின் அரைசதங்கள் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 345 ரன்கள் ஆக உயர்ந்துள்ளது. கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் முப்பத்தி எட்டு ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 5 விக்கெட்டுகளையும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். இந்த நிலையில் சற்று முன் தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ள நியூசிலாந்து அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.