வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (21:38 IST)

இன்று தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் எத்தனை பேர்? விரிவான தகவல்

கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்று முதல் நாடு முழுவதும் பொது மக்களுக்கு போடப்பட்டது
 
நாடு முழுவதும் இன்று மட்டும் 1.65 லட்சம் பேருக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு ஒரு தடுப்பூசி எழுதப்பட்டதாகவும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
மேலும் இன்று மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் 1.65 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
அதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் அதில் பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட வரவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன