வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (08:15 IST)

பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை

பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் அவர்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று நான்கு பிரிவுகளாக நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேல், சீனாவின் சூயிங் என்பவருடன் மோதினார். இந்த போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் பவினாவை சூயிங் வீழ்த்தினார்
 
இருப்பினும் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய வீராங்கனை பவினாபென் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது