1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (07:42 IST)

மீண்டும் ஒரு த்ரில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

india won wi1
மீண்டும் ஒரு த்ரில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் திரில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹோப் 115 ரன்கள் அடித்தார் என்பதும் கேப்டன் பூரன் 74 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 312 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்சர் பட்டேலுக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது. 
 
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டில் வெற்றி பெற்றதால் இந்திய அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.