திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (07:26 IST)

2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இதனையடுத்து இந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தத. சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார் இதனை அடுத்து 238 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 46 ஓவர்களில் 193 அவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால்  இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில்  இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 11ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது