1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India batting in T20 second match

டி20 இரண்டாம் போட்டி: இந்திய அணி பேட்டிங்!!

இந்தியா
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
 
இலங்கையுடன் முதல் டி-20 போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. 
 
இதனால் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் 2 வது டி20 போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் துவங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ராகுல் மற்றும் ரோகித் சர்மா துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
தோனி கிளாஸ்: 4 ஆம் நிலையே அவருக்கு சரியானது: ரோகித்!!