இந்தியா முழுவதும் சுற்றும் கார்த்திக் சுப்பராஜ் படக்குழு!

Last Modified வெள்ளி, 16 ஜூலை 2021 (17:23 IST)

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் ’சியான் 60’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளது படக்குழு.

முதல் கட்ட படப்பிடிப்பு எல்லாம் சென்னையில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டேராடூனில் ஆரம்பித்து கோவா வரை பல இடங்களில் நடக்க உள்ளதாம். ஏற்கனவே ஜகமே தந்திரம் படத்தை இங்கிலாந்தில் படமாக்கி செலவை இழுத்து விட்டார் கார்த்திக் சுப்பராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :