புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (08:41 IST)

இந்தியாவில் மட்டும் 230 வகையான வைரஸ் கண்டுபிடிப்பு: அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் இதுவரை 230 வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ‘இன்சாகாக்’ ஆய்வு தெரிவித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியுள்ளது. 
 
இதனோடு உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்ப கட்டத்தை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 230 வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இன்சாகாக் தெரிவித்துள்ளது. 
 
உருமாறிய டெல்டா வைரஸ், இப்போது 111-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உருமாறிய ஆல்பா வைரஸ் 178 நாடுகளிலும், பீட்டா வைரஸ் 123 நாடுகளிலும், காமா 75 நாடுகளிலும் பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.