1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (16:45 IST)

உலக கோப்பை டி20: ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
 
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12-ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பிரிவு இரண்டில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடந்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணி மோதும் போட்டி உறுதி என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது 
 
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அந்த போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி மிகவும் வலுவாக இருப்பதால் மீண்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது