திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (16:28 IST)

ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அங்கு முகாமிட்டுள்ளது. அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வந்த இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் அணியில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றே இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் டர்ஹம் நகருக்கு செல்லும் இந்திய அணியோடு அவர் செல்லமாட்டார் என சொல்லப்படுகிறது. அவர் எப்போது இந்திய அணியோடு இணைவார் என்பதும் அறிவிக்கப்படவில்லை.