திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (19:37 IST)

தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது தற்போது நம்பிக்கையில்லை- பிரதமர் மோடி

Pm Modi
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூரில் விவகாரத்தில்  மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கிய  நிலையில், இன்று காங்கிரஸ் உள்ளிட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி  உரையாற்றினார்.

அதில்,  எங்கள் மீது நம்பிக்கை வைத்த  மக்களுக்கு  நன்றி! நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு எதிரானது அல்ல. எதிர்க்கட்சிகளுக்கானது. எதிர்க்கட்சிகள் நோ பால் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்,  நாங்கள் சதம் மற்றும் சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை நோபால் போட்டால்  பரவாயில்லை. ஆனால்  எதிர்க்கட்சிகள் ஏன் திரும்ப திரும்ப நோபால் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்.

மேலும், ‘’அப்துல்கலாம் ராஜாஜி  பிறந்த தமிழ் நாட்டை இந்தியாயில் இருந்து பிரித்துப் பேசுகிறீர்கள்….வட இந்தியா மட்டுமே இந்தியா என்பது போன்ற  தோற்றத்தை உருவாக்குகிறீர்கள்.. 192 ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி  கதை முடிந்தது. தற்போது,  தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது  தற்போது நம்பிக்கையில்லை. அதேபோல், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை’’ என்று கூறினார்.

பிரதமர் மோடி மக்களவையில் பேசிக் கொண்டிருக்கும்போதே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவரது  பதிலுரையை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர்.