திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (12:49 IST)

ஒரே ஒரு போட்டி: விராத் கோஹ்லிக்கு குவியும் விளம்பரங்கள்!

Virat Kohli
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க விராட் கோலியே காரணம் என்பதும் தெரிந்ததே 
 
இந்த ஒரு போட்டி காரணமாக விராத் கோலிக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலிக்கு விளம்பரங்களும் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் விராட் கோலியின் வணிக மதிப்பு மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக விளம்பர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
கடந்த சில மாதங்களாக விராட் கோலி சரியாக விளையாடாத நிலையில் தற்போது மீண்டும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த விளம்பர நிறுவனங்கள் மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் புதிய நிறுவனங்களும் அவரை ஒப்பந்தம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran