1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 25 நவம்பர் 2023 (15:02 IST)

மும்பை இந்தியன்ஸில் மீண்டும் பாண்ட்யா… பறிபோகுதா ரோஹித்தின் கேப்டன்சி!

உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். இன்னும் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்தே அவர் வெளியேறியுள்ளார்.

இதையடுத்து அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குதான் திரும்புவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பியுள்ள நிலையில் அந்த அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது 36 வயதாகும் ரோஹித் ஷர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி உள்ளது. ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.