ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (10:06 IST)

பாலினச் சர்ச்சையில் சிக்கிய இமேன் கலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்!

ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அல்ஜீரியா குத்துச்சண்டை வீராங்கனை இமேன் கெலிஃப் சர்ச்சைகளில் சிக்கினார். லீக் சுற்றில் அவர் இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினிக்கு எதிராக விளையாடிய போட்டியில் இமேனின் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் 45 வினாடிகளில் அவர் போட்டியில் இருந்து விலகினார்.

மேலும் இமேன் ஆண் எனக் குற்றம்சாட்டி ஏஞ்சலா அந்த போட்டியில் விளையாட மறுத்தார். இதையடுத்து இமேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இமேனைச் சுற்றி சர்ச்சைகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. அவர் ஒரு பெண் அல்ல என்றும் ஆண் என்றும் அவரைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன. இந்நிலையில் இப்போது அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து தற்போது அவர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங் லியூவை வீழ்த்தி 66 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.