வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (11:24 IST)

அர்ஷத்தும் எனக்கு மகன் போலதான்.. தங்கம் வென்றதில் மகிழ்ச்சி! - நீரஜ் சோப்ரா தாயார் நெகிழ்ச்சி!

Neeraj Cjhopra

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவை பலரும் வாழ்த்தி வரும் நிலையில், நீரஜ்ஜின் தாயார், தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரும் தனக்கு மகன் போலதான் என தெரிவித்துள்ளார்.

 

 

பரபரப்பாக நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல நாடுகளும் தங்கம், வெள்ளியை அதிகளவில் வென்று வரும் நிலையில் இந்தியாவில் இருந்து வெண்கல பதக்கங்கள் மட்டுமே வெல்லப்பட்டு வந்தது. தங்க பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் பல காரணங்களால் தவறிப்போய் வருகிறது.

 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை வென்றார். பாகிஸ்தான் வீரர் அஷ்ரத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி வீசி புதிய சாதனை படைத்ததோடு தங்க பதக்கத்தையும் வென்றார். பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
 

 

எனினும் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய மக்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மகனின் வெற்றி குறித்து பேசிய நீரஜ்ஜின் தாயார் “நீரஜ்க்கு காயம் இருந்தது. இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். நதீம் தங்கப்பதக்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் எனக்கு மகன் மாதிரிதான்” என்று கூறியுள்ளார்.

 

நீர்ஜ் சோப்ராவின் தந்தை சதீஷ்குமார் பேசும்போது “எல்லாருக்கும் அவர்களுக்கான நாள் என்ற ஒன்று இருக்கும். இது பாகிஸ்தானின் நாள். நாம் வெள்ளி வென்றுள்ளோம். அதுவே பெருமைக்குரியதுதான்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K