செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (16:22 IST)

பண்ட் விளையாடுவது இடது கை சேவாக் போல உள்ளது! முன்னாள் வீரர் புகழாரம்!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பண்ட்டின் ஆட்டம் சேவாக் இடதுகையால் விளையாடுவது போல உள்ளது என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதையடுத்து அவருக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் ’ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை ரசித்து பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எந்த அழுத்தமும் ஒன்றும் செய்ய முடியாத வீரரைப் பார்த்தேன். அவர் விளையாடுவது இடதுகையால் சேவாக் விளையாடுவது போல உள்ளது. நான் சேவாகுக்கு எதிராக ஆடியுள்ளேன், அவரும் சூழ்நிலையெல்லாம் கவலைப்பட மாட்டார். ’பந்தை பார் அடி’அதுதான் அவர் ஸ்டைல்.’ எனக் கூறியுள்ளார்.