ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (09:12 IST)

இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை திருவிழா! – எந்தெந்த மைதானங்களில்?

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் எந்தெந்த மைதானங்களில் நடத்தப்பட உள்ளது என ஐசிசி பட்டியல் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தீவிரமாக இந்த போட்டிகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அக்டோபரில் தொடங்கி நவம்பர் வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிகளை இந்தியாவில் எந்தெந்த மைதானங்களில் நடத்துவது என்பது குறித்து ஐசிசி ஆலோசித்து வருகிறது. ஐசிசி தேர்வு செய்துள்ள மைதானங்களில் சென்னை, பெங்களூர், அகமதாபாத், மும்பை, நாக்பூர், டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஹைதராபாத், ராஜ்கோட், கொல்கத்தா, திருவனந்தபுரம், இந்தூர், தர்மசாலா ஆகிய மைதானங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.