ஐபிஎல் தொடரில் அதிக முட்டை போட்ட வாத்து ஆன ரோஹித் ஷர்மா…!
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் இது அவரின் 15 ஆவது டக் அவுட் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் மற்றும் மன்தீப் சிங் ஆகியோரோடு முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமீபகாலமாக் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் சிறப்பானதாக இல்லை. இந்நிலையில் நேற்று மும்பை அணிக்காக தன்னுடைய 200 ஆவது போட்டியை அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.