1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (12:29 IST)

அசைக்க முடியாத கோஹ்லி... ஆட்டம் கண்ட அஸ்வின்...

ஐ.சி.சி.யின் சமீபத்திய சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியல் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியானது. 


 
 
சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி தொடர்ந்து தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். 
 
சமீபத்தில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே நடைபெற்ற டி20 போட்டிகள் தரவரிசையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனாலும், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 
 
ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் வேக பந்து வீச்சாளரான ஸ்டெயின் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.