திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (12:52 IST)

காமன்வெல்த் போட்டிகள்: தங்கப் பதக்கம் வென்றார் ஹீனா சித்து

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

 
 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 10 தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.
 
தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 25மீ பிஸ்டல்  துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா தற்பொழுது வரை 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.