வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:58 IST)

இந்திய வீரரிடம் பதக்கம் பறிப்பு

சமீபத்தில் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, தற்போது, டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை பவினா படேல் முதல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், வட்டி எறிதலில், இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான  மதிப்பீட்டில் வினோத்குமார் தேர்ச்சி அடையாததால் அவரிடம் இருந்து பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.