செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:21 IST)

ரூபினா இறுதிப் போட்டிக்கு தகுதி - இந்தியாவுக்கு அடுத்த பதக்கம்!

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 
 
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் 34ம் இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதேபோல வில்வித்தை போட்டியில் இந்திய  வீரர் ராகேஷ்குமார் காலிறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.