1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (17:14 IST)

ஸ்பைடர் வுவமனாக மாறிய ஹர்லின் தியோல்… இணையத்தில் பாராட்டுகளைக் குவிக்கும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லின் தியொல் காற்றில் பறந்து பிடித்த அற்புதமான கேட்ச் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இங்கிலாந்து பெண்கள் அணிக்கெதிராக இந்திய பெண்கள் அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் வீராங்கனை ஹர்லின் தியோல் சிக்ஸ் லைன் அருகே வந்த பந்தை பறந்து பிடித்தார். ஆனால் அவரால் எல்லைக்கோட்டுக்குள் நிற்க முடியாமல் தடுமாறவே உள்ளுக்குள் செல்வதற்கு முன் பந்தை தூக்கி மேலே எறிந்துவிட்டு, உள்ளே சென்று மீண்டும் பறந்து மைதானத்துக்குள் வந்து பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார்.

இந்த கேட்ச் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி பரவி வருகிறது. வழக்கமாக ஆண்கள் கிரிக்கெட்டில்தான் இதுபோல ரிஸ்க்கான ஸ்பைடர் மேன் கேட்ச்கள் அதிகமாக பிடிக்கப்படும்.