புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (16:26 IST)

விக்ரம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… மீண்டும் சாமியாடும் அஜித் ரசிகர்கள்!

கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்துக்காக கமல் மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொண்ட போட்டோ ஷூட் ரகசியமாக நடந்துள்ளது. இதையடுத்து இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். இது ஏற்கனவே தங்கள் நடிகர் அஜித்தின் வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக காத்திருக்கும் நிலையில் விக்ரம் படத்தின் அறிவிப்பு அவர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு படத்தின் அப்டேட் வரும் போது அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றுவது வழக்கமாக வைத்துள்ளனர்.