வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (16:19 IST)

தனுஷின் அடுத்த படக் கதாநாயகிகள் இவர்கள்தானாம்!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் புதிய படத்துக்கான 3 கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்திருக்கிறார். அதையடுத்து இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்காவதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த மூன்று கதாநாயகிகள் யார் என்பது இப்போது வெளியாகியுள்ளது. நித்யா மேனன், ஹன்சிகா மோத்வானி மற்றும் ராஷி கண்ணா ஆகியோரை சன் பிக்சர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.