திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2018 (12:46 IST)

ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர்: தென் ஆப்ரிக்கா வீரர் புகழாரம்!!

வேகப்பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையுடைய ஹர்திக் பாண்டியா அடுத்த கபில் தேவ் என்று அழைக்கப்பட்டார். சமீபத்தைய போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 
 
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாகி வருகிறார் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் லன்ஸ் க்ளுசெனர் கருத்து தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் சொத்தாக உருவாகி வருகிறார். தென் ஆப்ரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாண்டியாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. 
 
அவரது திறமையால் தென் ஆப்பிரிக்க அணிக்கு அழுத்தத்தை அளித்தார். அவர் பந்து வீச்சிலும் மேம்படுத்தி கொண்டால் நிச்சயம் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாவார் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் கபிள் தேவ், ஹர்திக் பாண்டியா ரியல் ஆல்ரவுண்டர் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அதற்காக நாம் காத்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும் அவரிடம் உள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.