வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:12 IST)

கொஞ்சம் வெயிட் போடுப்பா… ஹர்திக் பாண்ட்யாவுக்கு அட்வைஸ் சொன்ன பாகிஸ்தான் வீரர்!

இந்திய அணியின் ஆல்ரவுனர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சல்மான் பட் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர் கிரிக்கெட்களில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் உடல் காயங்களால் அதிக போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் அவரைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சல்மான் பட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் ‘இந்திய கிரிக்கெட் அணி ஹர்திக் பாண்ட்யா மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் அவர் நீண்ட நாட்களாக விடுப்பில் உள்ளது போல இருக்கிறது. காயமடைவதற்கு முன்பாக அவருடைய பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. அவரின் பிரச்சனை என்னவென்றால் அவரின் உடல் எடைதான். அவர் இன்னும் கொஞ்சம் எடை ஏற்ற வேண்டும். ஒல்லியாக இருப்பதால் அவர் அடிக்கடி காயம் அடைந்து வருகிறார். அதை அவர் விரைவில் சரி செய்துகொள்வார் என்று நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.