எங்கள் மகன் நிச்சயதார்த்தம் பற்றி எனக்கே தெரியாது – ஹர்திக் பாண்ட்யாவின் தந்தை அதிர்ச்சி !

Last Modified திங்கள், 6 ஜனவரி 2020 (09:46 IST)
ஹர்திக் பாண்ட்யா நடிகை நடாஷாவை திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விவரம் எங்களுகே தெரியாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது காதலியான நடாஷா இவான்கோவிச்சை துபாயில் உள்ள கப்பல் ஒன்றில் வைத்து நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இது சம்மந்தமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தில் இருவரின் குடும்பத்தினர் ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் திருமண நிச்சயதார்த்தம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என பாண்ட்யாவின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘நடாஷா நல்ல பெண். அவர்கள் இருவரும் விடுமுறையைக் கொண்டாடதான் துபாய்க்கு செல்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் நிச்சயதார்த்தம் விவகாரம் பற்றி எனக்குத் தெரியாது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :