வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (08:17 IST)

ரோஹித் ஷர்மாவை மைதானத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய ஹர்திக் பாண்ட்யா… சர்ச்சை வீடியோ

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோற்றதால் 2-2 என்ற கணக்கில் தொடர் சமன் ஆனது. அதையடுத்து நடந்துள்ள டி 20 போட்டியை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் இணையத்தில் தற்போது ஒரு சர்ச்சையான வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

6 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஹர்திக் பாண்ட்யா ரோஹித் ஷர்மாவின் ஃபீல்ட் செட்டப்பால் அதிருப்தி அடைந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசுகிறார். இந்த வீடியோவில் மைதானத்தின் முழு பாகமும் வைட் ஆங்கிளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் முகம் காட்டப்படவில்லை. ஆனால் ஸ்டம்ப் மைக்கில் கேட்கும் குரல் ஹர்திக் பாண்ட்யாவுடையது என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து டிவிட்டரில் #hardhikabuserohith என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரண்ட் ஆகியுள்ளது.